
லடாக்கில் நிலவி வரும் பிரச்சனை குறித்து இந்தியா சீனா ஆகிய நாடுகள் இடையே ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் அதே நேரத்தில் சீனா இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனது பக்கத்தில் புதிய ராணுவ தளம் ஒன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பாங்காங் ஸோ ஏரியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் சீனா புதிய ஹெலிகாப்டர் தளம் ஒன்றை கட்டமைத்து வருகிறது.
ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள சீன ராணுவ ஹெலிகாப்டர் தளங்கள் சீன ராணுவத்திற்கு போதுமானவை ஆகும்.
ஆனால் இந்த தளம் புதிதாக கட்டப்படுவது சீனாவின் நீண்ட கால திட்டங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதாவது தொடர்ந்து ராணுவ பலத்தை அதிகரித்து லடாக்கை முழுவதும் அபகரித்து கொள்ளும் நயவஞ்சக நோக்கில் சீனா செயல்படுகிறது தெளிவாகிறது.
ஆகவே மத்திய அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு சீனாவை தடுத்து நிறுத்த வேண்டும்.