
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜீத் பல்டிஸ்தான் பகுதியில் சீன நிதி உதவியோடு பாகிஸ்தான் டயாமர் பாஷா எனும் மிகப்பெரிய அணையை கட்ட முடிவு செய்துள்ளது.
இந்த அணையின் கட்டுமான மதிப்பு சுமார் 442 பில்லியன் இந்திய ருபாய் ஆகும். இதில் சீன அரசு நிறுவனம் ஒன்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் வர்த்தக பிரிவு நிறுவனமும் இணைந்து பணியாற்ற உள்ளன. சுமார் 4500 மெகாவாட் மின்சாரம் இதன் மூலம் தயாரிகாகப்படும் என கூறப்படுகிறது.
இதனையும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்தையும் காரணம் காட்டி கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியில் ஒரு ராணுவ தளம் அமைக்க சீனா விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.