
மியான்மரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு சீனா ஆயுதம் வழங்குவதாக இந்திய பாதுகாப்பு முகமைகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.மியான்மர்-தாய்லாந்து எல்லையில் அதிக அளவிலான சீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இவை அரக்கான் இராணுவ பயங்கரவாத குழுவுக்கு அளிக்கப்பட இருந்ததாகவும் இவற்றின் உதவியுடன் இந்திய
கலடான் மல்டிமோடல் புரோஜெக்ட்டை தாக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏகே-47 துப்பாக்கிகள்,டேங்க் எதிர்ப்பு மைன்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.