
இந்தியா சீனா இடையே ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னரும் சீனா பின்வாங்க மறுத்துள்ளது.
பின்வாங்குவதாக கூறிவிட்டு தற்போது கனரக ராணுவ தளவாடங்கள் சகிதம் சுமார் 40,000 படையினரை எல்லையோர பகுதிகளில் சீனா குவித்துள்ளது.
ஃபிங்கர்4 மற்றும் ஃபிங்கர் 5 ஆகிய பகுதிகளில் இருந்து முழுவதும் பின்வாங்க சீனா மறுத்துள்ளது.
மேலும் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் ஆகிய பகுதிகளிலும் சீன ராணுவம் பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாங்கள் பின்வாங்கினால் பஃப்பர் ஸோன் பகுதிகளில் இந்திய ராணுவம் நுழைந்து விடும் அதனால் பின்வாங்க மறுப்பதாக சீனா தெரிவித்து உள்ளது.