குண்டுவீசும் விமானங்களை தென்சீனக் கடல்பகுதிக்கு அனுப்பும் சீனா-பதற்றம் அதிகரிப்பு

  • Tamil Defense
  • July 31, 2020
  • Comments Off on குண்டுவீசும் விமானங்களை தென்சீனக் கடல்பகுதிக்கு அனுப்பும் சீனா-பதற்றம் அதிகரிப்பு

சீனா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் தென்சீனக்கடல் பகுதிக்கு நெடுந்தூரம் செல்லும் குண்டுவீசும் விமானங்களை சீனா அனுப்பியுள்ளது.

தென்சீனக் கடல் பகுதியில் ஏற்கனவே சீனக்கடற்படை போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் தொலைதூர குண்டுவீசும் விமானங்களையும் சீனா அனுப்பியுள்ளது.

சீன இராணுவ செய்தி தொடர்பாளர் ரென் குவோகியாங் இதுகுறித்து கூறுகையில் இரவு நேரத்தில் தரையிறங்கவும் மேலே பறக்கவும் பயிற்சிகள் நடப்பதாக கூறியுள்ளார்.மேலும் நெடுந்தூர இலக்கை தாக்கியழித்தல் போன்ற பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவீன் நெடுந்தூர குண்டுவீசும் விமானங்களான
H-6G மற்றும் H-6K குண்டுவீசு விமானங்கள் ஆகியவை இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன.