
நேற்றைய தினம் நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசி பின்னர் அவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் சீனாவின் ஆதிக்க மனப்பான்மையையும், விரிவாக்க கொள்கையையும் சுட்டி காட்டும் வகையில் ஆக்கிரமிப்பு காலங்கள் முடிந்தது என்றார்.
இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்ஜி ராங் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியா எல்லை பிரச்சினையை தேவையின்றி பெரிது படுத்துவதாக தெரிவித்தார் மேலும் 12 நாடுகளுடன் சுமுகமாக எல்லை பிரச்சினையை தீர்த்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.