சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவை நிராகரிப்பதாக சீனா அடாவடி !!

கடந்த 2016ஆம் ஆண்டு சீனா தென்சீன கடல் பகுதியில் பெருமளவிலான பகுதிகளை உரிமை கோரியதை அடுத்த இது பற்றிய வழக்கு ஒன்று சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் முன்னர் விசாரணைக்கு வைக்கப்பட்டது.

ஃபிலிப்பைன்ஸ் அரசு சார்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சர்வதேச தீர்ப்பாயம் சீனாவின் உரிமை கோரல்களை நிராகரித்து உத்தரவு பிறப்பித்ததது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை சீனா மதித்து செயல்பட வேண்டும் என ஃபிலிப்பைன்ஸ் அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனால் சீனா அதற்கு பதிலாக இத்தகைய தீர்ப்பாயங்களில் சீனா கலந்து கொள்ளவுமில்லை, அதன் சட்ட விரோதமான தீர்ப்புகளை ஏற்று கொள்ளவுமில்லை என கருத்து தெரிவித்துள்ளது.

சீனாவின் அடாவடித்தனமான இச்செயல் ஃபிலிப்பைன்ஸ் அரசை கடுப்பேற்றி உள்ளது என கூறப்படுகிறது.