இந்திய கடற்படையின் மிரட்டலை புரிந்து கொண்ட சீனா

இந்திய பெருங்கடலில் கடற்படை கடும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.கடற்படையின் முன்னனி போர்க்கப்பல்கள் , நீர்மூழ்கிகள் மூலமாக மிரட்டும் ரோந்து பணியை கடற்படை செய்து வருகிறது.கடற்படையின் இந்த ஆக்ரோச தன்மையை சீனா புரிந்து கொண்டுள்ளது.

கல்வான் மோதலுக்கு பிறகு இந்திய கடற்படை ஆக்ரோசமாக தனது ரோந்து பணிகளை தொடங்கியது.சீனா ஏதேனும் அத்துமீறலில் ஈடுபடலாம் என்ற எண்ணம் அதிகரித்து வந்த நிலையில் முப்படைகளுமே ஒருங்கிணைந்த திட்டம் மூலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து படைத்தளபதிகளுமே தினமும் உரையாடி படைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்தினர்.மலாக்கா வழியாக வரும் சீனக்கப்பல்களுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்திய கடற்படை தனது செயல்பாட்டை அதிகரித்தது.

கடற்படையின் இந்த செயலை சீனா நன்கு உணர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது சீனா தனது போர்க்கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்புவதை குறைத்துள்ளது.

இராணுவம் சில டிவிசன்கள் உட்பட பல வீரர்களை எல்லையில் குவித்து தயாராக உள்ளது.

விமானப்படை தனது முன்னனி போர்விமானங்களை எல்லையில் நிறுத்தி இராணுவத்திற்கு உதவ தயாராக உள்ளது.

கடற்படை இந்திய பெருங்கடலில் சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.