பெருமளவில் தயாரிக்கப்பட உள்ள சீனாவின் ஐந்தாம் தலைமுறை போர்விமானமான J20b !!
1 min read

பெருமளவில் தயாரிக்கப்பட உள்ள சீனாவின் ஐந்தாம் தலைமுறை போர்விமானமான J20b !!

சீனாவின் முதல் ஐந்தாம் தலைமுறை விமானம் ஜே20 ஆகும், இதனை செங்டு ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. இந்த ஜே20 ஐந்தாம் தலைமுறை விமானமாக தயாரிக்கப்பட்டாலும் ஆனால் அதற்குரிய பல தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

இந்த நிலையில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு முழுமையான ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக ஜே20பி ரகம் உருவாக்கப்பட்டது. தற்போது இது பெருமளவில் தயாரிக்கப்பட்டு சீன விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது.

தற்போது வரை 50 ஜே20 விமானங்கள் சீன விமானப்பிடையில் உள்ளதாக தெரிகிறது. அதேபோல் ஜே20பி ரகத்தில் ஏறத்தாழ 200 போர் விமானங்களை இணைக்கவும் சீனா விரும்புகிறது. செங்டு நிறுவனத்தால் ஒரு மாதத்தில் 4 விமானங்களை தயாரிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஜே20பி விமானத்தில் அமெரிக்க எஃப்22 மற்றும் ரஷ்ய சுகோய்35 ஆகிய விமானங்களில் உள்ளதை போன்று த்ரஸ்ட் வெக்டார் கண்ட்ரோல் தொழில்நுட்பம் உள்ளது, இதன்மூலம் விமானத்தின் உந்து திறனை போர் விமானிக்கு வேண்டிய திசையில் செலுத்த முடியும்.

மேலும் ஜே20 விமானத்திற்காக உருவாக்கப்பட்ட சீன என்ஜினான WS-10 மற்றும் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட AL-31 ஆகிய என்ஜின்கள் போதுமான சக்தியை வழங்கவில்லை எனவும் அதனால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்அதி உயர் செயல்திறன் கொண்ட WS-15 என்ஜினை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இந்த பணிகள் 1 அல்லது 2 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீன கடற்படைக்காகவும் ஒரு சிறிய ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சீனா உருவாக்க எண்ணுகிறது, அதிகபட்சமாக தற்போது சோதனைகளில் உள்ள ஷென்யாங் ஜே31 இந்த இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது.