Breaking News

பாக்கிற்கு நான்கு தாக்கும் ஆளில்லா விமானங்களை வழங்கும் சீனா

  • Tamil Defense
  • July 6, 2020
  • Comments Off on பாக்கிற்கு நான்கு தாக்கும் ஆளில்லா விமானங்களை வழங்கும் சீனா

சீனா பாக் எகானாமிக் காரிடர் மற்றும் குவாதர் துறைமுகம் ஆகியவற்றை பாதுகாக்க பாகிஸ்தானிற்கு சீனா தாக்கும் ஆளில்லா விமானங்களை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலுசிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் மற்றும் அதனை சார்ந்து பெல்ட் மற்றும் ரோடு இனிசியேட் எனும் திட்டத்தின் கீழ் 60பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் சீனா பாகிஸ்தானிற்கு இரண்டு விங் லூங் ட்ரோன் அமைப்புகளை வழங்க உள்ளது (ஒரு அமைப்பில் இரண்டு ட்ரோன்கள் மற்றும் ஒரு தரை கட்டுபாட்டு மையம் இருக்கும்).

இதைத்தவிர சீனா பாகிஸ்தானுடன் இணைந்து 48 ஜி.ஜே2 ( விங் லூங் ட்ரோனின் தாக்குதல் வடிவம்) ட்ரோன்களை பாகிஸ்தான் விமானப்படைக்கு தயாரிக்க முன்வந்துள்ளது.

சீனா பாகிஸ்தானை தவிர பல நாடுகளுக்கு தாக்குதல் மற்றும் உளவு பணிகளை மேற்கொள்ளும் விங் லூங் ட்ரோன்களை வழங்கி உள்ளது. சவுதி அரேபியா, கஸகஸ்தான், துர்க்மெனிஸ்தான், அல்ஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுமார் 163 ட்ரோன்களை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2018வரை விற்றுள்ளது.

சீன ட்ரோன்களை பல நாடுகள் வாங்க காரணம் அமெரிக்காவை போல் பயன்பாட்டு ரீதியாக பல கட்டுபாடுகளை சீனா விதிப்பது இல்லை, மேலும் அமெரிக்க ட்ரோன்களை விடவும் விலை குறைவு போன்ற காரணங்கள் ஆகும்.

ஆனால் சீன ட்ரோன்கள் பயன்பாட்டு அளவில் பெரிய அளவில் வெற்ளி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது காரணம் முழு போர்த்திறன் இல்லாத ஆயுத குழுக்களே இந்த ட்ரோன்களை எளிதில் வீழ்த்துகின்றனர்.