பூட்டான் உடனும் எல்லை பிரச்சினையை தொடங்கிய சீனா !!

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on பூட்டான் உடனும் எல்லை பிரச்சினையை தொடங்கிய சீனா !!

சீனா தொடர்ந்து மண்ணாசை காரணமாக பல நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வரும் நேரத்தில் தற்போது பூட்டானையும் சீண்டி பார்க்கிறது.

உலக சுற்றுச்சூழல் அமைப்பு உலகின் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த அத்திட்டங்கள் சார்ந்த நாடுகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பில் பூட்டானில் இந்திய சீன எல்லையோரம் உள்ள ட்ராஷிகாங் மாவட்டத்தில் சாக்டெங் வன சரணாலயம் அமைப்பதற்கு உதவுவது பற்றிய ஆலோசனை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சீனா அந்த பகுதி தங்களுக்கு உரியது எனும் தொனியில் அங்கு வன சரணாலயம் அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த உலக சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாகிகள் பூட்டானை ஆதரித்து தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றி உள்ளனர்.

சீனா கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் தனது மண்ணாசை வெறியை சற்றும் தயங்காமல் வெளிகாட்டி வருகிறது என்பதை இதை போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.