தனது இழப்பை மூடிமறைக்க சீனா முயற்சி, தனது நாட்டு வீரர்களுக்கு எவ்வித மரியாதையும் அளிக்கவில்லை : அமெரிக்க உளவு தகவல் !!

  • Tamil Defense
  • July 16, 2020
  • Comments Off on தனது இழப்பை மூடிமறைக்க சீனா முயற்சி, தனது நாட்டு வீரர்களுக்கு எவ்வித மரியாதையும் அளிக்கவில்லை : அமெரிக்க உளவு தகவல் !!

கல்வான் பள்ளதாக்கில் நடந்த மோதலின் போது நமது தரப்பில் 20 வீரர்களை நாம் இழந்தோம் அவர்களுக்கு தகுந்த ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

அதுவே சீனாவில் தனது இழப்பை மூடிமறைக்கும் கேவலமான செயலில் அந்நாட்டு அரசு இறங்கி உள்ளது.

நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரை அரசு இழிவுபடுத்தி வருவதாகவும், வீர மரணம் அடைந்த பல வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வில்லை எனவும் அமெரிக்க உளவு தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் இந்த செயல் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.