14 நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து விட்டு 18 நாடுகளுடன் எல்லை பிரச்சினை : சீன அடாவடித்தனம் !!

  • Tamil Defense
  • July 16, 2020
  • Comments Off on 14 நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து விட்டு 18 நாடுகளுடன் எல்லை பிரச்சினை : சீன அடாவடித்தனம் !!

சீனா 14 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது, ஆனால் சுமார் 18 நாடுகளுடன் எல்லை பிரச்சினையை கொண்டுள்ளது.

இந்த விசித்திரமான சீன நடவடிக்கை எந்தெந்த நாடுகளுடன் பிரச்சினையை கிளப்பி உள்ளது என பார்க்கலாம்.

1) பூட்டான் – குலா காங்க்ரி மலை, ஹா மாவட்டம் மற்றும் செர்கிப் கோம்பா,தோ, சன்மார், டன்மார், தார்சென் உள்ளிட்ட பல பகுதிகள்.

2) ப்ருனய் – ஸ்ப்ரால்டி தீவுகள்.

3) கம்போடியா

4) இந்தியா – அக்ஸாய் சின், அருணாச்சல பிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகள்.

5) இந்தோனேசியா – தென்சீன கடல் பகுதி.

6) ஜப்பான் – சென்காகு தீவுகள், ரியூக்கு தீவுகள், கிழக்கு சீன கடல் பகுதிகள் .

7) லாவோஸ்

8) மலேசியா – மேற்கு கபெல்லா, ஜேம்ஸ் ஷோல் பவளப்பாறை பகுதி உள்ளிட்டவை

9) மங்கோலியா

10) நேபாளம் – நேபாளம் திபெத்தின் ஒரு பகுதி என சீனா வாதிடுகிறது. (திபெத் சீன ஆக்கிரமிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது).

11) வடகொரியா – முழுவதுமாக

12) தென்கொரியா – தென்கொரியா முழுவதுமாக

13) ஃபிலிப்பைன்ஸ் – தென் சீன கடல் பகுதிகள்.

14) ரஷ்யா – வ்ளாடிவோஸ்டாக், ப்ரிமோர்ஸ்கி க்ராய், மற்றும் கிழக்கு ரஷ்யாவில் 1,60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிகளை உரிமை கோருகிறது சீனா.

15) சிங்கப்பூர் – தென்சீன கடல் பகுதிகள்

16) தஜிகிஸ்தான் – முழுவதுமாக

17) தைவான் – முழுவதுமாக

18) வியட்நாம் – பராசெல் தீவுகள், மெக்லஸ்ஃபீல்டு பகுதி மற்றும் தென்சீன கடல் பகுதிகள்.