ஆசியாவைும் தாண்டி…! நீர்நில தாக்கும் படைப்பிரிவு பலத்தை அதிகரிக்கும் சீனக் கடற்படை

  • Tamil Defense
  • July 21, 2020
  • Comments Off on ஆசியாவைும் தாண்டி…! நீர்நில தாக்கும் படைப்பிரிவு பலத்தை அதிகரிக்கும் சீனக் கடற்படை

அமெரிக்காவை அடக்கும் பொருட்டும் அமெரிக்கா சீனாவை தாக்கும் பொருட்டு சீனக்கடல் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு கடும் பதிலடி கொடுக்க 1990களில் தனது படைப்பலத்தை அதிகரிக்க சீனா முடிவெடுத்தது.தற்போது எந்தபகுதியிலும் அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அளவிற்கு தனது படைப்பலத்தை சீனா அதிகரித்துள்ளது.

சீனா தற்போது தனது புதிய இரு டைப்075 ஆம்பிபியஸ் தாக்கும் கப்பல்களை லாஞ்ச் செய்துள்ளது.அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவுக்கு இணையானதொரு படைப்பிரிவை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.தொலைதூரத்தில் நடக்கும் போருக்கு அனைத்து ஆயுதங்களுடன் தனியாகவே களம் காணும் வண்ணம் இந்த படையை உருவாக்க சீனா எண்ணுகிறது.

40000 டன்கள் எடையுடைய இந்த இரு டைப் 075 கப்பல்களும் சிறிய விமானம் தாங்கி கப்பல்கள் தான்.கிட்டத்தட்ட 900 வீரர்கள் ,கனரக ஆயுதங்கள் ஆகியவற்றை இந்த கப்பல்களால் சுமந்து செல்ல முடியும்.தற்போது 30 வானூர்திகளை இவற்றால் சுமந்து செல்ல முடியும்.எதிர்காலத்தில் அமெரிக்காவின் எப்-35 போல செங்குத்தாக மேலெலும்பும் ஒரு விமானத்தை சீனா மேம்படுத்திவிட்டால் அதையும் கூட இந்த கப்பல்களில் உபயோகப்படுத்த முடியும்.

கடந்த வருட செப்டம்பரில் முதல் Type 075 கப்பலும் அதன் பிறகு ஏப்ரலில் இரண்டாவது கப்பலும் லாஞ்ச் செய்யப்பட்டது.மூன்றாவது கப்பல் கட்டுமானத்தில் உள்ளது.ஏழு அல்லது அதற்கு மேலும் இந்த ரக கப்பல்களை சீனா கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் கட்டுமானங்கள் வேகமாக நடைபெறுவதாக சீன இராணுவ அதிகாரி தெரிவித்திருந்தார்.

சீனா அமெரிக்கா இடையிலான இராணுவ உறவு நாளுக்கு நாள் மோசமாகி தான் வருகிறது.தென்சீனக்கடலில் 90% பகுதியை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் அது சட்டவிரோதமானது என கடந்த வாரம் அமெரிக்க ஸ்டேட் செக்கரட்டரி மைக் பாம்பியோ தெரிவித்திருந்தார்.இது தென்சீனக்கடல் பகுதியில் சீனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் இந்த கருத்து தென்சீனக்கடல் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும் என சீனாவும் கூறியது.

தற்போது சீனாவின் ஆம்பிபியஸ் படைகளின் பலம் அமெரிக்க படைப்பலத்திற்கு இணையானது இல்லை எனினும் சீனா இதற்கு இணையாக பலத்தை பெற வேகமாக முயற்சித்து வருகிறது.சீனக்கடலோர பகுதிகளில் வரும் எதிரிகளுக்கு கடும் பதிலடி கொடுக்கும் அளவிற்கு தன் பலத்தை பலமடங்கு பெருக்கியுள்ளது.2012ல் ஷின்பிங் பதவிக்கு வந்த பிறகு நவீனப்படுத்துதல் தொடங்கியது.சீனாவிற்கு வெளியேயும் தூர ஆசிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்த ஆம்பிபியஸ் படைகள் மற்றும் சிறப்பு மரைன் படைகளம உருவாக்கப்பட்டு பெருக்கப்பட்டு வருகின்றன.

சீனாவிடம் தற்போது 25,000 முதல் 35,000 மரைன் வீரர்கள் உள்ளனர்.விமானங்கள் குண்டுகளை வீசலாம் கப்பல்கள் ஏவுகணைகளை வீசலாம் ஆனால் எதிரி நாட்டில் தரையிறங்கி நிலத்தை ஆக்கிரமிக்க இன்பாட்ரி வீரர்கள் தேவை மற்றும் ஆம்பிபியஸ் கப்பல்கள் இல்லையென்றால் இது சாத்தியப்படாது.இந்த வகையில் ஒரு பெரிய கடற்படைக்கு நீர்நில கப்பல்கள் எனப்படும் ஆம்பிபியஸ் கப்பல்கள் தேவையாக உள்ளன.

இந்த டைப் 075 கப்பல்கள் கட்டுமானங்கள் முடிக்கப்பட்டு படையில் இணைக்கப்பட்டால் மற்ற கப்பல்களுடன் இணைந்து ஒருங்கிணைந்து ஒரு தரமான ஆம்பிபியஸ் படையை சீனாவால் கட்டமைக்க முடியும்.இதன் மூலம் தூர தீவு நாடுகளில் ஆபரேசன்கள் நடத்த சீனாவால் முடியும்.

தைவானையோ அல்லது சீனாவுக்கு அருகே உள்ள சர்ச்சைக்குரிய தீவு பகுதிகளை இந்த ஆம்பிபியஸ் கப்பல் பிரிவு மூலம் சீனாவால் கைப்பற்ற முடியும்.

தைவான் சுயமாக தன்னை ஆட்சி செய்துகொள்ளும் ஒரு பிரதேசம்.ஆனால் சீனாவோ அதை தனது என்று கூறி அதை கைப்பற்றுவதை தனது கனவாகவே கொண்டுள்ளது.
தைவானை சுற்றி பயிற்சிகளையும் , இராணுவ ஆபரேசன்களையும் சீனா அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.அடிக்கடி தைவான் எல்லைக்குள்ளும் சீன விமானங்கள் நுழைவதும் வழக்கம் ஆகும்.

இவற்றை எதிர்கொள்ள தைவானும் பயிற்சிகளை துரிதப்படுத்தியுள்ளது.ஜீலை 13ல் தனது அனைத்து படைகளையும் ஒருங்கிணைத்து தைவான் ஒரு போர்பயிற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.