டோக்லாமில் இந்தியாவின் பதிலடியை எதிர்பார்க்காத சீனா : சீன வல்லுநர் யுன் ஸுன் !!

  • Tamil Defense
  • July 1, 2020
  • Comments Off on டோக்லாமில் இந்தியாவின் பதிலடியை எதிர்பார்க்காத சீனா : சீன வல்லுநர் யுன் ஸுன் !!

அமெரிக்காவில் உள்ள ஸ்டிம்சன் மையத்தில் கிழக்காசிய திட்டத்தின் இணை இயக்குனராக பணியாற்றுபவர் யுன் ஸுன், இவர் சீன விவகாரங்கள் நிபுணராவார்.

நேற்று இவர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் “டோகாலாமில் தனது நடவடிக்கைகளுக்கு இத்தனை தீவிரமாக இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதை சீனா சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

இந்தியா பூட்டான் மற்றும் சீனா இடையே உள்ள மும்முனை சந்திப்பான டோக்லாம் பகுதி எதற்கும் பயனற்ற ஒரு பகுதி அந்த பகுதியில் சீனா கட்டுமான பணிகளை மேற்கொண்ட போது இந்தியா அதனை மிக தீவிரமாக எதிர்த்து சீனா பின்வாங்கும் வரை அதாவது சுமார் 73 நாட்கள் வரை பின்வாங்காமல் சீனாவுக்கு குடைச்சல் கொடுத்தது.

இதை சற்றும் எதிர்பாராத சீனா தனது நடவடிக்கைகளை சிறிது மாற்றி விட்டு தற்போது லடாக்கில் பல முனைகளில் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் இந்தியா தனது பகுதியில் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அவற்றிற்கு இடையூறு செய்யவும் இதனை அருமையான வாய்ப்பாக பார்க்கிறது.

ஆசிய கண்டத்தின் இருபெரும் சக்திகளான இந்தியா மற்றும் சீனா இடையை நடக்கும் அரசியல் உலக புவிசார் அரசியலிலும், ஆசிய குறிப்பாக தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அதிகார சமநிலைகளை கடுமையாக பாதிக்கும் என்கிறார்.

இரு நாடுகளுமே தங்களது தேசிய பாதுகாப்பு காரணமாக செய்யும் பணிகள் மற்ற நாட்டிற்கு பாதுகாப்பு பிரச்சினையாக உள்ளது ஆகவே இத்தகைய பிரச்சினைகள் தொடரும் எனவும் கூறினார்.