போர்பயிற்சிகள் என்ற பெயரில் சீனா கிழக்கு லடாக் எல்லைப்பகுதிக்கு படைப்பிரிவை நகர்த்தி வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.ஏப்ரல் முதலே இதை செயல்படுத்தி வருகிறது சீனா.
இதற்கு எதிராக தான் இந்தியாவும் படைப்பிரிவுகளை நகர்த்துகிறது.டிபிஓ மற்றும் டெஸ்பங் செக்டார்களில் கட்டுமானத்தை சீனா நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
பலமுறை பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இரு நாட்டு படைகளும் பின்வாங்குவது என முடிவெடுக்கப்பட்டாலும் என்ன நடக்கும் என்பதை பொறுத்தே பார்க்க வேண்டும் எனவும் அமைதி நிலைநாட்டப்பட்டால் நல்லது தான் என இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்திருந்தார்.
போர்பயிற்சி என்ற பெயரில் தளவாடங்களை குவிக்க தொடங்கியது சீனா.அதன் பின் அவற்றை இந்திய எல்லை நோக்கி நகர்த்தியுள்ளது.இதை உணர்ந்த இந்திய இராணுவம் தனது படைகளை உடனடியாக எல்லைக்கு அனுப்பியது.
இரு டிவிசன்கள் ராணுவப் படைகளை சீனா குவித்துள்ளது.முதல் டிவிசன் 20000 வீரர்கள் கிழக்கு லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.அதற்கு பிறகு சீன எல்லையில் வடக்கு ஷின்சியாங் பகுதியில் 10000 வீரர்கள் தயாராக உள்ளனர்.சண்டை எனும் போது 48 மணி நேரத்திற்குள் இவர்கள் எல்லைக்கு விரைய முடியும்.அந்த பகுதிகளில் அதற்கான கட்டுமானத்தை சீனர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
இந்தியா கிட்டத்தட்ட 35000 வீரர்களை குவித்துள்ளது.