ஹூஸ்டனில் உள்ள சீனத்தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டதை அடுத்து வுகானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட சீனா பரிசீலனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா இந்த முடிவை கைவிட வேண்டும் என சீனா முதலில் வலியுறுத்தியது.அப்படி இல்லாத பட்சத்தில் பதிலடி தரப்படும் என காட்டமாக பதிலளித்திருந்தது சீனா.
இது ஒருதலைபட்சமான முடிவு எனவும் சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் வாங் வென்பின் கூறியிருந்தார்.