ரஷ்யாவுடனும் எல்லை தகராறில் ஈடுபடும் சீனா !!

  • Tamil Defense
  • July 4, 2020
  • Comments Off on ரஷ்யாவுடனும் எல்லை தகராறில் ஈடுபடும் சீனா !!

சமீபத்தில் ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரம் தோற்றுவிக்கப்பட்ட 160ஆவது வருட விழாவை முன்னிட்டு ஒரு காணொளியை வெளியிட்டு உள்ளனர்.

இதை பார்த்த சீன அதிகாரிகள் விளாடிவோஸ்டாக் நகரம் 19ஆம் நூற்றான்டில் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது சீனாவின் கிங் பேரரசின் காலத்தின்போது மஞ்சூரியா பகுதியில் ஹைஷென்வாய் எனும் பெயரில் இருந்த நகரம் தான் விளாடிவோஸ்டாக் எனவும் பின்னர் இரண்டாம் ஒபியம் போரில் சீனா தோல்வி அடைந்த நேரத்தில் அந்த பகுதியை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

சீனா வரிசையாக ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், இந்தியா, தைவான் மற்றும் இப்போது ரஷ்யா என பல நாடுகளுடன் வம்பிழுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.