
சீனா ஹிமாலயன் பிரதேசத்தில் உள்ள நாடுகளை மிரட்டக்கூடாது அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி மைக் பாம்பியோ சீனாவிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இங்கிலாந்து ஸ்டேட் செகரட்டரியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உங்கள் நாட்டின் இறையாண்மைக்குள் வராத கடற் எல்லைகளை நீங்கள் உரிமைகொள்ள முடியாது.ஹிமாலயன் பகுதிகளில் உள்ள அண்டை நாடுகளை மிரட்ட கூடாது என மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
மே 5 முதல் இந்திய சீனத் துருப்புகள் எல்லையில் மோதல் போக்கில் இருக்கும் நேரத்தில் இது போன்ற கருத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.பூடான்,நேபாளம் ,தென்சீனக்கடல் பகுதி நிறைய நாட்டின் பகுதிகளை தன்னுடையது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.