பாங்காங் ஸோ பகுதியில் இருந்து மேலும் பின்வாங்கிய சீன படைகள் !!

  • Tamil Defense
  • July 12, 2020
  • Comments Off on பாங்காங் ஸோ பகுதியில் இருந்து மேலும் பின்வாங்கிய சீன படைகள் !!

பாங்காங் ஸோ ஏரியை ஒட்டிய ஃபிங்கர்4 மலைப்பகுதியில் இருந்து சீன படைகள் முழுவதும் வெளியேற வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது சீனா தனது படைபலத்தை இப்பகுதியில் குறைத்துள்ளது.

அதாவது ஃபிங்கர்4 மலையின் மேல் உச்சியில் இருந்து சீன படைகள் விலகி உள்ளன. வெறுமனே விலகியதோடு மட்டுமில்லாமல் கணிசமான அளவில் படைபலத்தையும் சீன ராணுவம் குறைத்துள்ளது.

அதை போலவே பாங்காங் ஏரியில் நிலை நிறுத்தி இருந்த படகுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று ராஜாங்க ரீதியாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது விரைவில் மற்றொரு ராணுவ கமாண்டர்கள் சந்திப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த ராணுவ கமாண்டர்கள் சந்திப்பானது விரைவில் நடைபெற உள்ளது எனவும், இந்த சந்திப்பில் மேலும் படைக்குறைப்பு செய்வதை பற்றி பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.