
சீனா சமீபத்தில் தனது கடற்படைக்கு முற்றிலும் புதிய வகை நிலநீர் போர்முறை கப்பலை கட்ட முடிவு செய்துள்ளது.
இக்கப்பலுக்கான வடிவமைப்பு பற்றிய தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது,
இது பார்ப்பதற்கு ஏற்கனவே சீனா இயக்கி வரும் டைப்075 ரக நிலநீர் போர்முறை கப்பல்களை போல் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக முற்றிலும் மாறுப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்காவின் ஃபோர்டு ரக விமானந்தாங்கி கப்பல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் EMALS விமான ஏவுதல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
மேலும் விமானங்கள் வெற்றிகரமாக தரை இறங்குவதை உறுதி செய்யும் வகையில் Arresting wires தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது,
இது உண்மையானால் உலகிலேயே மேற்குறிப்பிட்ட இரு வகை தொழில்நுட்பங்களை கொண்டுள்ள ஒரே கப்பலாக இந்த புதிய சீன போர்க்கப்பல் இருக்கும்.
இந்த புதிய சீன போர்க்கப்பல் PROJECT XX6 என அழைக்கப்பட்டாலும், இது புதிய டைப்076 ரக போர்க்கப்பல் என பரவலாக பேசப்படுகிறது.
இந்த கப்பல்களில் இருந்து சீனாவின் ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானங்களான GJ-11 SHARP SWORD இயக்கப்படும் என தெரிகிறது.
GJ-11 SHARP SWORD
சுமார் 4000கிமீ இயக்க வரம்பு கொண்ட இந்த ஆளில்லா விமானங்கள் ஏறத்தாழ 2000கிலோ எடையிலான ஏவுகணைகள் அல்லது குண்டுகளை சுமந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவற்றில் AR500C அல்லது WZ-5B SKY HAWK 5 ரக ஆளில்லா ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது, இந்த ட்ரோன்கள் சீனா பயன்படுத்தி வரும் Z-8 போக்குவரத்து ஹெலிகாப்டர்களின் அளவில் பாதி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
AR500C unmanned helicopter
மேலும் சீனா கட்டி வரும் டைப்003 ரக விமானந்தாங்கி கப்பல்களிலும் EMALS தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.