மியான்மர் பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் சீனா, சர்வதேச உதவி கோரும் மியான்மர் !!

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on மியான்மர் பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் சீனா, சர்வதேச உதவி கோரும் மியான்மர் !!

மியான்மர் நாட்டின் தென் பகுதியில் அராக்கன் ராணுவம் என்ற பிரிவினைவாத குழு ஒன்று இயங்கி வருகிறது.

இந்த குழுவிற்கு சீனா காலம் காலமாக உதவி வருகிறது என்பது உலகறிந்த விஷயம், ஆனால் தற்போது அது மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்து உள்ளது.

மியான்மர் ராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் மின் ஆங் ஹ்லியாங் கூறுகையில் இப்பிராந்தியத்தில் உள்ள சக்தி வாயந்த நாடு பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அதை முறியடிக்க சர்வதேச உதவி தேவைப்படுவதாகவும் கூறினார்.

சீனா அராக்கன் ராணுவம் மற்றும் அராக்கன் ரோஹிங்கியா மீட்பு ராணுவம் ஆகிய இரு குழுக்களுக்கு தொடர்ந்து நவீன கருவிகளை கொடுத்து உதவி வருகிறது.

அதுவும் அராக்கன் ராணுவத்திற்கு 95% நிதி உதவி அளிப்பது சீனா ஆகும், மேலும் தாழ்வாக பறக்கும் வானூர்திகளை வீழ்த்த உதவும் 50 ஏவுகணை கருவிகளையும் சீனா வழங்கி உள்ளது.

சீனாவின் இந்த செயல்பாடுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அடங்கும், அதாவது மியான்மரில் தனது ஆதிக்கத்தை பன்மடங்கு அதிகரித்து கொள்ள விரும்புகிறது.