மாற்றுபாலின அதிகாரிகளை துணை ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு !!

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on மாற்றுபாலின அதிகாரிகளை துணை ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு !!

மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றுபாலினத்தவரை துணை ராணுவ படைகளில் அதிகாரிகளாக சேர்க்க திட்டமிட்டு உள்ளது.

மத்திய ரிசர்வ் காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லைகாவல் படை, ஷாஸ்திர சீமா பல், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றில் இதனை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது,
மேலும் இதுபற்றிய கருத்துக்களையும் கேட்டுள்ளது.

மூத்த துணை ராணுவப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில் மாற்றுபாலினத்தவரை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்வது வீரர்களுக்கு புதிதாக இருக்கும் ஆனால் காலப்போக்கில் சரியாகி விடும் என்றார்.

மேலும் பேசுகையில் இத்தகைய மாற்றங்களை நாட்டின் ஆயுத படைகளே முன்னெடுக்கவில்லை எனில் சமுகத்தின் மற்ற பிரிவுகள் பழைய வழக்கங்களை களைவதை எந்த வகையில் எதிர்பார்க்க முடியும் என்றார்.

எது எப்படியோ இதனை விரிவான ஆய்வுக்கு பின்னர் அமல்படுத்த வேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்து.