
பாக்கின் மோர்ட்டார் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் பங்கர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பல நாட்கள் தங்கும் அளவுக்கு அனைத்து வசதிகளும் இந்த பங்கர்கள் இருக்கும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு பங்கரும் பத்துலட்சம் என்ற செலவில் கட்டப்பட்டு வருகிறது.இந்த பங்கருக்குள் ஒரு வாஷ் ரூம் மற்றும் மற்ற இரு ரூம்கள் இருக்கும்.
போனியார் மற்றும் உரி பகுதிகளில் 18 பங்கர்கள் அமைக்கப்பட உள்ளது.தற்போது ஆறு பங்கர்களுக்கான கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
பாக் தாக்குதலில் அதிகமாக பாதிக்கப்படும் பகுதியாக இந்த பகுதி இருப்பதால் மேலதிக பங்கர்கள் தேவை என அங்குள்ள கிராம வாசிகள் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.