கிழக்கு லடாக்கில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஒன்றான கோக்ராவில் பஃப்பர் ஸோன்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கல்வான் பகுதியில் பிபி14 பகுதியை விட்டு சீன ராணுவம் அவர்களது தளவாடங்கள் கவச வாகனங்களுடன் பின்வாங்கினர்.
இதையடுத்து கல்வான் பகுதியில் நான்கு கிலோமீட்டர் அளவு கொண்ட பஃப்பர் ஸோன் ஒன்று உருவாக்கப்பட்டது.
தற்போது கோக்ரா ஹாட் ஸ்ப்ரிங் பகுதியில் இருந்தும் சீன படையினர் பின்வாங்கி உள்ளனர்.
ஆகவே தற்போது இந்த பகுதியிலும் நான்கு கிலோமீட்டர் அளவிலான பஃப்பர் ஸோன் அமைக்கப்பட்டு வருகிறது. இது சார்ந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என கூறப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் கிழக்கு லடாக்கில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ள 15 இடங்களில் இருந்தும் படைகளை விலக்குவது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.