வங்காளதேச எல்லையில் கடத்தல்காரர்கள் அட்டுழியம்; 3 எல்லை பாதுகாப்பு படையினர் காயம் !!

  • Tamil Defense
  • July 5, 2020
  • Comments Off on வங்காளதேச எல்லையில் கடத்தல்காரர்கள் அட்டுழியம்; 3 எல்லை பாதுகாப்பு படையினர் காயம் !!

மேற்க வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வங்காளதேச எல்லையோரம் ஜூலை 4 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அதிகாலை 3.30மணியளவில் 10-12 வங்காளதேச கடத்தல்காரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.

அப்போது நமது எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது நீளமான மூங்கில் தடிகள் மற்றும் டாஹ் எனும் வெட்டுக்கத்தியால் கடத்தல்காரர்கள் தாக்கினர்.

நமது வீரர்கள் உயிருக்கு ஆபத்தற்ற பம்ப் ஆக்ஷன் துப்பாக்கிகளால் ஐந்து ரவுண்டுகள் சுட்ட பின்னரே கடத்தல்காரர்கள் வந்த திசை நோக்கி தப்பி சென்றனர்.

ஆனால் இந்த தாக்குதலில் நமது வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர், மேலும் கடத்தல்காரர்கள் இடமிருந்து ஒரு 8கிலோ கஞ்சா பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே வங்காளதேச எல்லைபகுதி மிகவும் மோசமானது இப்பகுதியில் பணியாற்றும் வீரர்கள் அடிக்கடி இத்தகைய தாக்குதல்களை சந்திக்க வேண்டியதாகிறது.

அத்தகைய அசாதாரண சூழல் நிலவும் பகுதியில் வீரர்களுக்கு ஆபத்தான ஆயுதம் பயன்படுத்த அனுமதி இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.