கிழக்கு லடாக்கிற்கு டேங்குகள் அனுப்ப மூன்று பாலங்கள் அமைப்பு

  • Tamil Defense
  • July 7, 2020
  • Comments Off on கிழக்கு லடாக்கிற்கு டேங்குகள் அனுப்ப மூன்று பாலங்கள் அமைப்பு

கிழக்கு லடாக் பகுதிக்கு டேங்குகளை அனுப்ப மூன்று பாலங்களை எல்லைச் சாலைகள் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.லடாக்கின் நிமு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பாலம் திங்கள் முதல் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

இந்த பாலங்கள் மூலம் அதிகனரக தளவாடங்களை கிழக்கு லடாக் பகுதிக்கு அனுப்ப முடியும்.பழைய பரேய்லி பாலம் 24 டன்கள் மட்டுமே சுமக்கும் தன்மை கொண்டிருந்தது.தற்போது அது மாற்றப்பட்டு 70 டன்கள் வரை தாங்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது.வெறும் மூன்றே மாதத்தில் இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பாலம் நிமு பகுதியின் பாஸ்கோ என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ளது.இது இன்னும் சில நாட்களில் தனது செயல்பாட்டை தொடங்கும்.

உலே டோபோ என்னுமிடத்தில் மூன்றாவது பாலம் அமைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீநகர்-லே சாலைக்கு கொஞ்சம் முன்புறம் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலங்கள் வழியாக கவச வாகனங்கள்,டேங்குகள்,ஆர்டில்லரி போன்றவற்றை கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்த்த முடியும்.