
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றும் முடிவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை தயாரித்துள்ள அறிக்கையில் ஹூவாய் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அதிகாரிகள் ஏற்கனவே பொருத்தப்பட்டு உள்ள கருவிகளையும் அகற்ற முடிவு செய்துள்ளனர் என கூறப்படுகிறது.
மேலும் ஹூவாய் நிறுவனத்திற்கு மாற்றாக தென் கொரியாவின் சாம்சங் மற்றும் ஜப்பானுடைய என.இ.சி கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.