சீனாவை புறந்தள்ளி விட்டு செயற்கைகோள் ஏவ இந்தியாவை நாடிய பிரேசில் !!
1 min read

சீனாவை புறந்தள்ளி விட்டு செயற்கைகோள் ஏவ இந்தியாவை நாடிய பிரேசில் !!

வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியா பிரேசில் நாட்டின் அமேசானியா1 எனும் செயற்கைகோளை தனது பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவ தயாராகி வருகிறது.

இந்த செயற்கைகோள் அமேசான் காடுகளின் அழிவு பற்றிய தகவலை தந்து அதனை தடுக்க உதவும், ஆகவே இது பிரேசில் நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைகோள் ஆகும்.

இதை தவிர இருநாடுகளும் வேறு சில ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள உள்ளன, அதன்படி இந்தியாவின் ரிஸோர்ஸ்சாட்1 செயற்கைகோள் தகவல்களை பிரேசில் பெற்று கொள்ளும்.

மேலும் பிரேசில் நாட்டின் மையங்கள் இந்திய செயற்கைகோள்களிடம் இருந்து தகவல்களை பெற முடியும், மேலும் அதற்கான மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல் பணிகளை இந்தியா அந்த மையங்களில் மேற்கொள்ளும்.

மேலும் பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி கல்லூரியுடன் இஸ்ரோ தனது ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட உள்ளது.