
போயிங் நிறுவனம் இந்திய விமானப்படைக்கு மொத்தமாக 22 அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தது.
தற்போது 22 அபாச்சிகளில் கடைசி 5 ஹெலிகாப்டர்களையும் மீதமுள்ள சினூக் ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்து விட்டதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர்களின் மூலமாக நாட்டின் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்பட்டு இருப்பதை மறுக்க முடியாது.