பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள பன்ஜ்குர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிஜாக் பள்ளதாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பலூச் விடுதலை ராணுவம் நடத்திய தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
இதில் மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கையில் பல குளறுபடிகள் உள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் அறிவிப்பின்படி மூன்று வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
அல்ஜசீரா ஊடகம் வெளியிட்ட தகவலின்படி 8 வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
பலூச் விடுதலை ராணுவத்தின் அறிக்கைப்படி 20 வீரர்கள் மரணமடைந்துள்ளனர்
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.