சீன செயலிகள் மீதான தடை தேசிய பாதுகாப்புக்கு நல்லது: அமேரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ !!

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on சீன செயலிகள் மீதான தடை தேசிய பாதுகாப்புக்கு நல்லது: அமேரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ !!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா சமீபத்தில் சீன செயலிகளை தடை செய்ததை பாராட்டி உள்ளார்.

அவர் இது பற்றி பேசுகையில் இந்த 59 செயலிகள் மீதான தடை பாராட்டுக்கு உரியது, இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறது என்றார்,

மேலும் இந்த தடையானது இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை ஆகியவற்றிற்கு மிகவும் நல்லது என்று கூறினார்.

இந்த 59 செயலிகளை தடை செய்வதற்கு பிரதான காரணமாக கூறப்படுவது தகவல் திருட்டு மற்றும் பிகர்வு ஆகும்.

அதாவது தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்கள் அதை பயன்படுத்துவோரின் தகவல்கள் மற்றும் தரவுகளை சேகரித்து பின்னர் சீன அரசுடன் பகிர்ந்து கொள்கின்றன எனும் உறுதிபடுத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகும்.

சீன அரசு இத்தகைய திருட்டுத்தனமாக சேகரிக்கப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் மிக அதிகம், ஆகவே இதனை காரணமாக வைத்து தான் இந்த செயலிகள் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.