
சமீபத்தில் நமது எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கால்நடைகள் வங்கதேச எல்லைக்கு கடத்தி வரப்படுவதாகவும்,
பின்னர் வாழை மர தண்டுகளில் கட்டி கங்கை நதியில் தள்ளிவிடப்படுவதாகவும் அப்படியே மிதந்து செல்கையில் வங்காளதேச எல்லையை அடையும் நேரத்தில் படகுகளில் வந்து கடத்தல்காரர்கள் கால்நடைகளை இழுத்து செல்வதாகவும் இதற்கு வங்காளதேச எல்லை காவல்படை உதவியாக இருப்பதாகவும் நமது எல்லை காவல் படை கூறியுள்ளது.
சில சமயங்களில் அதிகாரிகளிடம் மாட்டி கொள்ளாமல் இருக்க கடத்தல்காரர்கள் கால்நடைகளின் வாலை கீறி அழுத்தம் கொடுத்து வேகமாக ஒட வைப்பதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதுபற்றி வங்கிளதேச எல்லை காவல்படை தலைமை அதிகாரி பேசுகையில் தனது படையினருக்கு கால்நடை கடத்தலை தடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.