
உலகில் வளர்ந்து வரும் அதிசக்தியுடைய இராணுவங்களுள் இந்திய பாதுகாப்பு படைகளும் ஒன்று.
1) சுகோய்-30எம்கேஐ
சுகோய் 30 எம்கேஐ என்பது இரஷ்யா தனது விமானப்படைக்காக மேம்படுத்திய சு-30 விமானத்தின் வகை ஆகும்.தற்போது இது அனுமதி பெற்று இந்தியாவின் ஹால் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.தொடர்ந்து நான்கு மணி நேரம் பறக்க கூடிய திறனுடையது.3000 கிமீ வரை செல்லக்கூடியது.இந்தியாவிடம் தற்போது வானிலேயே எரிபொருள் நிரப்ப கூடிய வசதி இருப்பதால் கூடுதலாக 10 மணி நேரம் வரை பறக்க வல்லது.பிரம்மோஸ் ஏவுகணையை ஏந்தி செல்ல ஏற்றது என்பதால் இதன் தாக்கும் சக்தி அதிகரித்துள்ளது.பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏவியோனிக்ஸ் பொருத்தப்பட்டு, ரேடியசன் எதிர்ப்பு ஏவுகணை , ஜாமிங் பேடு ஆகியவை பொருத்தப்பட்டு நவீன போர் உலகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.
இந்திய கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக இந்த சுகோய் ஸ்குவாட்ரான்கள் விளங்குகிறது.
இந்தியா வெளிநாடுகளுடன் இணைந்த நடத்தும் அனைத்து விமானப் போர் பயிற்சிகளிலும் சுகோய் விமானம் இடம்பெறும்.ஒரு முறை ராயல் விமானப் படையுடனாக பயிற்சியின் போது அதன் தளபதி கிளென் டோர்பி சுகோய் விமானத்தில் பறக்க நமது விமானப்படை அனுமதி அளித்தது.பறந்த பிறகு அவர் “Master in dogfight” என அவர் சுகாய் விமானத்தை புகழ்ந்தார்.
அதே போல அமெரிக்காவின் கோப் இந்தியா 04 பயிற்சியின் போது சுகோய் மிகச் சிறப்பாக செயல்பட்டது.இதில் அமெரிக்காவின் எப்-15 உடன் சுகோய் போட்டியிட்டது.நடந்த மொத்த பயிற்சியில் 90% வெற்றியை சுகோய் விமானங்கள் தட்டி சென்றன.அடுத்த வருடம் நடைபெற்ற கோப் இந்தியா 05ல் எப்-16 விமானத்தை வீழ்த்தியது.
பிறகு 2015ல் நடைபெற்ற இந்திர தனுஷ் பயிற்சியில் ராயல் விமானப் படையின் டைபூன் விமானத்தை 12-0என்ற அளவில் வீழ்த்தியது.
சுகாய் சொல்ல தகுந்த அளவு விபத்திலும் சிக்கி உள்ளது.
சுகாய் விமானத்தில் 12 ஹார்டுபாயிண்டுகள் உள்ளன.அவற்றின் உதவியால் பல்வேறு வகையான ஆயுதங்களை சுகாய் சுமந்து செல்லக்கூடியது.
ராக்கெட்டுகள்:
நான்கு S-8 மற்றும் நான்கு S-13
துப்பாக்கி:
ஒரு 30 mm Gryazev-Shipunov GSh-30-1 autocannon
ஏவுகணைகள்:
வான்-வான் ஏவுகணை:
பத்து R-77
பத்து 10 அஸ்திரா
ஆறு R-27ER/ET
இரு R-27R/T
ஆறுR-73
மூன்று K-100
Su-30mki launching Astra
வான்-தரை ஏவுகணைகள்:
மூன்று Kh-59ME
ஆறுKh-29T/L
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்:
மூன்று Kh-59MK
நான்கு Kh-35
ஆறு Kh-31A
ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணைகள்
ஆறு Kh-31P
தவிர பலவகை குண்டுகளை தாங்கி செல்ல கூடியது.நடவடிக்கைக்கு தகுந்த அளவில் அதன் ஏவுகணை தேர்வு இருக்கும்
கடந்த மார்ச் 2017ல் இராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் விபத்தானது.இதில் விமானிகள் உயிர் தப்பினர்.
மே 2017ல் தேஸ்பூருக்கு 60கிமீ தொலைவில் விபத்தானது.இதில் ஒரு விமானிகளும் வீரமரணம் அடைநதனர்.
ஜீன் 2018ல் புத்தம் புதிய சுகாய் விமானம் படையில் இணைக்கப்படுவதற்கு முன் விபத்தில் சிக்கியது.விமானிகள் உயிர்தப்பினர்.
ஆனால் இது விமானத்தின் திறனை முடிவு செய்யாது.விமானத்தை யார் இயக்குகிறார்கள் என்பதே முக்கியது.அந்த வகையில் நமது விமானிகள் திறமையானவர்கள்.
இந்தியாவுக்கே வெற்றி