
கடந்த வாரம் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை ஸ்ப்ரால்டி தீவுகள் அருகே சீன கடற்படையின் கப்பல்கள் சீண்டிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பானிய கடற்படைகள் உடனான கூட்டு பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் ஸ்ப்ரால்டி தீவுகள் பகுதி வழியாக சென்றன.
அப்போது சீன கடற்படை கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களுடன் முரட்டுத்தனமான வகையில் நடந்து கொண்டுள்ளன.
ஹெச்.எம்.ஏ.எஸ். ஹோபார்ட், ஹெச்.எம்.ஏ.எஸ். கேன்பெர்ரா, ஹெச்.எம்.ஏ.எஸ். அருன்டா மற்றும் ஹெச்.எம்.ஏ.எஸ். சிரியஸ் ஆகிய ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை தான் சீன கடற்படை சீண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.