
ஆஸ்திரேலியா சமீபத்தில் புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டது, இது ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகவும் தீவிரிமான கொள்கையாக பார்க்கப்படுகிறது.
காரணம் அடுத்த 10 ஆண்டுகளில் 20லட்சம் கோடியை செலவிடுவதன் மூலமாக தனது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
தற்போது 17,000 வீரர்கள் மற்றும் 46 கலன்களை கொண்டதாக ஆஸ்திரேலிய கடற்படை உள்ளது.
இதில் 2 கான்பெர்ரா ரக நீலநீர் தாக்குதல் கப்பல்கள், 6 கால்லின்ஸ் ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள் (3000 டன்கள்), 3 ஹோபார்ட் ரக நாசகாரி கப்பல்கள், 8 அன்ஸாக் ரக ஃப்ரிகேட் கப்பல்கள் (3600 டன்கள்) 4 கண்ணிவெடி போர்முறை கலன்கள் , 1 பே ரக டேங்கர் கப்பல் உள்ளிட்ட முன்னனி கப்பல்களை தற்போது கொண்டுள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் அதிக கப்பல்களை குறிப்பாக நீர்மூழ்கிகளை இணைக்க ஆஸ்திரேலியா விரும்புகிறது.
புதிதாக 12 4500டன் எடை கொண்ட பெரிய தாக்குதல் நீர்மூழ்கிகளை இணைக்கவும், 12 மிகப்பெரிய கடலோர பாதுகாப்பு ரோந்து கலன்கள், மேலும் 4 கண்ணிவெடி போர்முறை கலன்கள், இரண்டு புதிய சப்ளை கப்பல்கள்,
மேலும் 7500 டன்கள் எடைகொண்ட 8 புதிய ஹன்ட்டர் ரக ஃப்ரிகேட் கப்பல்கள் என ஆஸ்திரேலியா மிகப்பெரிய திட்டத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.