
ஹாங்காங் மக்கள் மீது சீன அரசு மிக கொடுரமான அடக்குமுறையை நிகழ்த்தி வருகிறது.
மேலும் உலகத்தின் ஏதோ ஒர் பகுதியில் வாழும் ஒருவர் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் அந்த நபரையும் குற்றவாளி ஆக கருதும் சட்டத்தையும் சீனா நிறைவேற்ற முயற்சி செய்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஹாங்காங் மக்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை நீட்டிப்பதாகவும், ஹாங்காங் மக்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார்.
இதன்படி கல்வி மற்றும் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஹாங்காங் மக்களுக்கு ஐந்து வருடம் விசா நீட்டிப்பு வழங்கவும் இதன் வழியாக நிரந்தர குடியுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஹாங்காங்கை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்காலத்தில் குடிபெயரவும் வழிவகை செய்யப்படும் என தெரிகிறது.