
ஆஸ்திரேலிய அரசு சில நாட்களுக்கு முன்னர் சீனா தென்சீன கடல் பகுதியில் வைத்துவரும் உரிமை கோரல்களை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்சீன கடல்பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு சொந்தமான தீவுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்ற பகுதிகளை,
பாரம்பரியம் வரலாறு போன்ற காரணங்களை முன்வைத்து உரிமை கோரி வரும் சீனாவின் நடவடிக்கைகளை ஏற்க முடியாது எனவும்,
2016ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை சீனா ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும் சீனாவின் ஒருதலைபட்சமான தான்தோன்றி தனமான உரிமை கோரல்களை ஆஸ்திரேலியா முழுவதுமாக நிராகரிப்பதாகவும் அறிவித்து உள்ளது.