
இந்தியா டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை சமீபத்தில் தடை செய்தது, இதன் காரணமாக சீனாவுக்கு பல ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பாக டிக் டாக் தடையால் மட்டுமே சுமார் 45ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவிலும் பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் டிக் டாக்கை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ஆஸ்திரேலியாவிலும் இத்தகைய கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் டிக் டாக் தேசிய பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்மதோடு ஆஸ்திரேலிய சட்டங்களுக்கு புறம்பாக செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதை பற்றி டிக் டாக்கின் ஆஸ்திரேலிய பிரிவு தலைவரான லீ ஹன்ட்டர் இத்தகைய குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்.
ஆனாலும் ஆஸ்திரேலியா அரசியல் தலைவர்கள் குறைந்தபட்சம் வருடாந்திர பாராளுமன்ற விசாரணையில் டிக் டாக் சேர்க்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.