
இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள மலபார் கடற்போர் பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.தற்போது அமெரிக்கா,ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.இதில் ஆஸ்திரேலியாவும் நிரந்தர உறுப்பினராக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயலும் இந்திய பெருங்கடலிலேயே தான் இந்த மலபார் 2020 போர்பயிற்சியும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மட்டுமே ஆஸ்திரேலியா கடற்படை இந்த மலபார் பயிற்சியில் கலந்து கொண்டது.அதன் பின் சீனாவின் அழுத்தத்தின் பேரில் எத்தனையோ முறை ஆஸ்திரேலியா பயிற்சியில் பங்கேற்க அனுமதி கேட்ட போதும் இந்தியா மறுத்துவிட்டது.
அது தற்போது இறந்தகாலமாகிவிட்டது.தற்போது 2020ல் மலபார் பயிற்சி வேறுவிதமாக நடைபெற உள்ளது என இராணுவ அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சியில் ஆஸ்திரேலியாவை இணைப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இராணுவ பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.