புதிய துப்பாக்கிகளை பெறும் ஆஸ்திரேலிய ராணுவம் !!

  • Tamil Defense
  • July 24, 2020
  • Comments Off on புதிய துப்பாக்கிகளை பெறும் ஆஸ்திரேலிய ராணுவம் !!

ஆஸ்திரேலிய ராணுவம் மிக நீண்ட காலமாக ஆக் ஸ்டெய்ர் AUG STEYR ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தது.

பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு 70மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் புதிய துப்பாக்கிகளை வாங்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து சுமார் 30,000 EF88 அல்லது F90 தாக்குதல் துப்பாக்கிகளை வாங்க தேல்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

தற்போது கூடுதலாக 8,500 EF88 அல்லது F90 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது,

இவற்றுடன் சுமார் 2500 STEYR MANNLICHER SL40 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு வருடங்களில் அனைத்து துப்பாக்கிகளையும் ஆஸ்திரேலிய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.