MH-60R ரோமியோ-நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை அரக்கன்

  • Tamil Defense
  • July 20, 2020
  • Comments Off on MH-60R ரோமியோ-நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை அரக்கன்

இந்தியக் கடற்படைக்காக அமெரிககாவிடம் இருந்து
MH-60R நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் வாங்கப்பட உள்ளது.இதுநாள் வரை பழைய சீகிங் வானூர்திகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன.இவற்றை மாற்றுவதன் அவசியம் குறித்து ஏற்கனவே பல்வேறு முறை நமது பக்கத்தில் கூறியிருந்தோம்.ஒரு அதிநவீன டெஸ்ட்ராயர் போர்க்கப்பல் நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தி இல்லாமல் ஆழ்கடலுக்கு செல்வதள ஆபத்தானதே.அந்த குறை தற்போது நீக்கப்படுகிறது எனினும் ரோமியோ வானூர்திகள் குறைந்த அளவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

ரோமியோ வானூர்தி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.நீர்மூழ்கி எதிர்ப்பு,கடற்பரப்பு இலக்குகளை அழித்தல்,தேடுதல் மற்றும் மீட்பு,
naval gunfire support (NGFS), கண்காணிப்பு, communications relay, logistics support மற்றும் personnel transfer and vertical replenishment (VERTREP) என பல்வேறு பணிகளுக்கு இந்த வானூர்தியை பயன்படுத்த முடியும்.

கடற்பரப்பு இலக்குகளை அழிக்க Lockheed Martin AGM-114 Hellfire anti-surface ஏவுகணைகளை கொண்டுள்ளது.

நீர்மூழ்கி எதிர்ப்புக்காக MH-60R வானூர்தி மூன்று ATK mk50 or mk46 active / passive இலகுஎடை டொர்பிடோக்களை சுமந்து செல்லும் .மேலும் ஒரு pintle-mounted 7.62mm இயந்திர துப்பாக்கியும் கொண்டுள்ளது.

Countermeasures and sensors technology

எதிரிகள் வானூர்தியை தாக்க முற்பட்டால் தற்காப்புக்காக பல்வேறு அமைப்புகளை கொண்டுள்ளது. இதற்கென Lockheed Martin AN/ALQ-210 electronic support measures system (ESM) உள்ளது. மின்னனு போர்முறைக்கு ATK AN/AAR-47 ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு ,லேசர் எச்சரிக்கை அமைப்பு, BAE Systems AN / ALQ-144 infrared jammer மற்றும் AN / ALE-39 chaff மற்றும் flare decoy dispenser ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் மிக முக்கியமாக ஒரு sonobuoy launcher மற்றும் a Raytheon AN / AQS-22 advanced airborne low-frequency (ALFS) dipping sonar உள்ளது.நமது போர்க்கப்பல் ஆழ்கடலில் செல்லும் போது இந்த வானூர்தி கப்பலுக்கு முன்பே பறந்து சோனோபாய் அல்லது டிப்பிங் சோனாரை கடலுக்குள் இறக்கி எதிரி நீர்மூழ்கி நடமாட்டம் உள்ளதா என சோதிக்கும்.ஆபத்து எனும் பட்சத்தில் தனது டோர்பிடோக்களில் ஒன்றை ஏவி அழிக்கும்.

இவைகள் தவிர MH-60R வானூர்தியில் Raytheon AN / AAS-44 detecting / tracking system, which includes a forward-looking infrared (FLIR) and laser rangefinder ஆகியவை உள்ளன.

இந்த வானூர்தியில் Telephonics AN / APS-147 multi-mode ரேடார் உள்ளது.இது மிகச்சிறிய இலக்குகளை கூட தேடிப்பிடிக்கும் ஆற்றல் கொண்டது.