1)ஸ்வெஸ்தா Kh-35
இரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட இந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பல தளங்களில் இருந்து பயன்படுத்த முடிந்தாலும் இந்தியாவை பொருத்தவரை இந்திய கடற்படையின் மிக்-29யுபிஜி மற்றும் மிக்-29கே ரக விமானங்கள் மட்டுமே சுமந்து செல்லக்கூடியவை.அதன் பிறகு பிரம்மபுத்ரா ரக பிரைகேடு கப்பல்களிலும் இவை உபயோகப்படுத்தப்படுகிறது.
பிரம்மபுத்ரா
மாக்-1க்கும் குறைவாக அதாவது மாக்-0.8 முதல் மாக்-0.95 வரையான வேகம் வரை செல்லும்.அதாவது மணிக்கு 1100கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.இதன் பிரதான பணி போர்க்கப்பல்களை அடுத்து அழிப்பது தான்.உரான்-இ எனப்படும் இந்த ஏவுகணை உலகின் தலைசிறந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளில் ஒன்றாக உள்ளது.கிட்டத்தட்ட 300கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறனுடையது.
2)கிளப் ரக ஏவுகணைகள்
3M-54 Kalibr
கிளப்-எஸ் மற்றும் கிளப்-என் என இந்தியக் கடற்படை இரு ரகங்கள் உபயோகிக்கிறது.இந்த கிளப்-எஸ் ரக ஏவுகணைகள் நமது சிந்துகோஷ் ரக நீர்மூழ்கிகளில் செயல்பாட்டில் உள்ளது.200-300கிமீ தூரம் வரை இந்த ஏவுகணைகள் செல்லும்.இலக்கை நெருங்கும் நேரத்தில் சூப்பர்சோனிக் வேகத்தில் செல்லக்கூடியது.
ஐஎன்எஸ் சிந்துகோஷ்
கிளப்-என் என்பது போர்க்கப்பல்களில் இருந்து ஏவப்படக்கூடியது.இலக்கை நெருங்கும் போது 2.9மாக் வேகத்தில் செல்லும்.இதன் மொத்த தாக்கும் தொலைவு 220கிமீ.கடற்படையின் சிவாலிக் ரக பிரைகேடு கப்பல்கள்,தல்வார் ரக பிரைகேடின் முதல் மூன்று கப்பல்கள் இந்த கிளப் ஏவுகணைகளை கொண்டுள்ளன.
ஐஎன்எஸ் சிவாலிக்