கடல் கண்ணிவெடி போர்முறை பயிற்சிகளில் அமெரிக்க மற்றும் ஜப்பான் கடற்படைகள் !!

  • Tamil Defense
  • July 24, 2020
  • Comments Off on கடல் கண்ணிவெடி போர்முறை பயிற்சிகளில் அமெரிக்க மற்றும் ஜப்பான் கடற்படைகள் !!

கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய மைவெக்ஸ் 2020 பயிற்சிகள் ஜப்பானுடைய வடக்கு கடல்பகுதியில் நடைபெற்று வருகின்றன.

இந்த பயிற்சியில் அமெரிக்க கடற்படையின் கண்ணிவெடி போர்முறை படையணி-7 மற்றும் ஜப்பான் கடற்படையின் கண்ணிவெடி போர்முறை படையணி- 3 ஆகியவை பங்கு பெற்றுள்ளன.

இந்த பயிற்சிகளில் கடலில் கண்ணிவெடிகளை வைத்தல், கண்டுபிடித்தல், செயலிழக்க செய்தல்போன்றவற்றை இரு படையணிகளும் கூட்டாக மேற்கொள்ள உள்ளன.

இதில் ஜப்பான் சார்பில்

1) ஜே.எஸ். உராகா
2) ஜே.எஸ். புங்கோ
3) ஜே.எஸ். அவாஜி
4) ஜே.எஸ். ஹிராடோ
5) ஜே.எஸ். மியாஜிமா
6) ஜே.எஸ். எனோஷிமா
7) ஜே.எஸ். நவோஷிமா
8) ஜே.எஸ். உகுஷிமா
9) ஜே.எஸ். ஸூகஷிமா
10)ஜே.எஸ். அவோஷிமா
11)ஜே.எஸ். தகஷிமா
12)ஜே.எஸ். யகுஷிமா
13)ஜே.எஸ். குரோஷிமா
14)ஜே.எஸ். சிச்சிஜிமா
15)ஜே.எஸ். ஷிஷிஜிமா
ஆகிய கலன்கள் மற்றும் 1 பி1 விமானமும், 1 பி3சி விமானமும் பங்கேற்றுள்ளன.

அதே போல அமெரிக்க கடற்படையின் சார்பில்,
1) யு.எஸ்.எஸ். பேட்ரியாட்
2) யு.எஸ்.எஸ். பயோனிர்
ஆகிய கலன்கள் பங்கு பெற்றுள்ளன.

அமெரிக்க 7ஆவது கண்ணிவெடி போர்முறை பிரிவில் இன்னும் 2 கலன்கள் உள்ளன என்பது கூடுதல் தகவல்.