
சீனா தொடர்ந்து எல்லைக்கு படைகளை அனுப்பி வரும் வேளையில் இந்திய இராணுவம் மேலும் ஒரு டிவிசன் படைப் பிரிவை லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சேர்த்து நான்கு டிவிசன்கள் தற்போது கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.மே மாதத்திற்கு முன் ஒரே ஒரு டிவிசன் மட்டுமே லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.லடாக் பிரச்சனைக்கு பிறகு தற்போது மாபெரும் அளவில் இந்திய இராணுவம் படைப்பிரிவை அனுப்பி வருகிறது.
ஒரு டிவிசன் பிரிவு என்பது 15 முதல் 20000 வீரர்களை உள்ளடக்கியதாகும்.இந்த புதிய டிவிசன் உத்திரப்பிரதேசத்தில் இருந்து எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளது.இத்துடன் இந்த டிவிசனின் ஆர்டில்லரி பிரிவும் லடாக் நோக்கி பயணிக்கிறது.
தெற்கு லடாக்கில் காரகோரம் முதல் சுமர் வரை 856 கீமீ லடாக் எல்லையில் முழுதும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.மே மாதம் பிரச்சனை தொடங்கிய போது உத்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலில் இருந்து இரு மலையக டிவிசன்கள் படைகள் லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டன.இந்த இரு படைகளும் இரு முக்கியமான இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 14வது கோர் படைப்பிரிவு தற்போது லடாக்கில் தயாராக உள்ளது.மறுபுறம் பாக்கை சமாளிக்க கார்கில் மற்றும் ட்ராஸ் பகுதிகளுக்காக 8வது டிவிசன் படைப்பிரிவும் ,இங்கு சீன எல்லை யை தொடும் பகுதியை 3வது டிவிசனும் காவல் காக்கிறது.