இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை அடக்க வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்தமானில் கட்டுமானங்களை அதிகரித்து படைப்பிரிவுகளை கூட்டி பலத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சீனப்படைகள் எல்லையில் அதிகரிக்கப்பட்டு வரும் வேளையில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்தமானை பலப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2001ல் அந்தமான் நிகோபர் கட்டளையகம் ஏற்படுத்தப்பட்டது.மற்ற கட்டளையகங்களை போல அல்லாமல் இந்தியாவின் முதல் முப்படைகள் இணைந்த கட்டளையகமாக இது உள்ளது.
ஆனால் தொடங்கப்பட்டது முதல் பெரிதாக எந்த செயல்பாடும் இல்லை.போதிய நிதி,கட்டமைப்பு இல்லை.முப்படைகளுக்கும் இடையே உரசல்களால் ஆபரேசன் குறைபாடு உள்ளது.
எனினும் இவை அனைத்தையும் முறியடித்து தற்போது லடாக் பிரச்சனை காரணமாக அந்தமான் கட்டளையம் தற்போது தனது செயல்படும் திறனை அதிகரிக்க உள்ளது.
ஐஎன்எஸ் கொஹொசா தளத்தின் ஓடுதளம் நீட்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு தற்பாது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏவுகணை பேட்டரிகள்,மேலதிக காலாட்படை வீரர்கள் மற்றும் மேலதிக போர்க்கப்பல்களை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.