
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை நிர்வாகம் தெரிவித்துள்ளது ஆனால் அது எத்தகைய நடவடிக்கைகள் ஆக இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கொரோனா, ஹாங்காங், தென்சீன கடல்பகுதியில் பிரச்சினை காரணமாக மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது.
ஏற்கனவே சில நடவடிக்கைகளை சீனாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நிலையில் தற்போது மேலதிக நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க அமைச்சர்கள் பல்வேறு மூத்த அதிகாரிகள் ஆகியோர் சீனாவை மிக கடுமையாக விமர்சிப்பதும் சீனாவுக்கு எதிராக நணவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கெய்லி மெக்எனானி அவர்களிடம் கேள்வி கேட்கபட்ட போது சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கப்போவது உண்மை தான் ஆனால் அதிபர் ட்ரம்ப் முடிவெடுக்கும் முன்னர் எதையும் நான் பேச விரும்பவில்லை ஆனால் வரும் நாட்களில் அமெரிக்க நடவடிக்கைகளை நீங்கள் காணலாம் என்றார்.