சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுபாடு அமெரிக்க அரசு அறிவிப்பு !!

  • Tamil Defense
  • July 8, 2020
  • Comments Off on சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுபாடு அமெரிக்க அரசு அறிவிப்பு !!

திபெத்தில் வெளிநாட்டவர்களை சீனா அனுமதிப்பது இல்லை, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் சீன அதிகாரிகள் அமெரிக்கா செல்வதற்கு விசா கட்டுபாடுகளை அமெரிக்க அரசு விதிக்க உள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் திபெத்தில் சீனா வெளிநாட்டு அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்களை அனுமதிப்பது இல்லை.

ஆனால் அதே நேரத்தில் சீன அதிகாரிகள் அமெரிக்கா வந்து செல்கையில் அளவற்ற சுதந்திரம் கொடுக்கப்படுகின்றனர்.

சீனா திபெத், ஸின்ஜியாங் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் மோசமான அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. அதனை மறைக்கும் நோக்கில் இப்பதிகளுக்கு வெளிநாட்டவர்கள் எளிதில் செல்ல முடியாத வகையிலும், சென்றாலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆகவே இனி அமெரிக்கா வர சீன அதிகாரிகளுக்கு பல விசா கட்டுபாடுகளை விதிக்க உள்ளோம் என அவர் கூறினார்.

எத்தனை சீன அதிகாரிகளுக்கு இந்த கட்டுபாடுகள் பொருந்தும் என்றோ அல்லது அவர்களின் எண்ணிக்கை பெயர் போன்ற எந்த விவரங்களையும் அமெரிக்க அரசு இதுவரை முடிவு செய்யவில்லை என தெரிகிறது.

இந்த புதிய கட்டுபாடுகள் சீன அமெரிக்க உறவில் மற்றொரு பெரிய விரிசலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.