சீனாவிற்கு திறந்த எச்சரிக்கை -இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த நிமிட்ஸ் போர்க்கப்பல்கள் குழு

  • Tamil Defense
  • July 20, 2020
  • Comments Off on சீனாவிற்கு திறந்த எச்சரிக்கை -இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த நிமிட்ஸ் போர்க்கப்பல்கள் குழு

அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் போர்க்கப்பல்கள் குழு இந்திய கடற்படையுடன் போர்பயிற்சி மேற்கொள்ள இந்தியப் பெருங்கடல் வந்துள்ளது.அந்தமான் நிகோபார் பகுதியில் இந்த போர்பயிற்சி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய சீனப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது அமெரிக்காவின் இந்த செயல் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.சீனாவிற்கு அமெரிக்காவின் திறந்த எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

PASSEX (passing exercise) என இந்த பயிற்சி அழைக்கப்படுகிறது.இந்தியாவும் அமெரிக்காவும் மலபார் என்ற போர்பயிற்சியை வருடந்தோறும் நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலாக்கா நீரிணை வழியாக இந்தியப்பெருங்கடல் பகுதியை அமெரிக்கா போர்க்கப்பல் குழு நுழைவதற்கு முன்பு தென்சீனக்கடலில் போர்பயிற்சி மேற்கொண்டிருந்தன.இந்த தென்சீனக்கடல் பகுதியின் 90% பகுதியை தான் சீனா தன்னுடையது என்று உரிமை கொண்டாடி வருகிறது.

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் 1 லட்சம் டன்கள் எடையுடையது.இவை சாதாரண விமானம் தாங்கி கப்பல்கள் அல்ல…சூப்பர் கேரியர்கள் என அழைக்கப்படுகின்றன.90 விமானங்களை சுமந்து செல்லும் இவை ஒரு குட்டி தீவுகள் தான்..

இந்திய கடற்படையின் பிரைகேட்,டெஸ்ட்ராயர்கள் மற்றும் நீர்மூழ்கிகள் அந்தமான் அருகே போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.தவிர இந்திய கடற்படையும் ஆக்ரோச ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.