ஆஃப்கானிஸ்தானில் 5 தளங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிய அமெரிக்கா !!
கடந்த ஃபெப்ரவரி மாதம் கத்தார் நாட்டில் வைத்து அமெரிக்க அரசும் ஆஃப்கன் தலிபான்களும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி படைகளை வாபஸ் வாங்குவது மிக முக்கியமான வாக்குறுதி ஆகும், அதன்படி தற்போது சில ஆயிரம் துருப்புகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்று கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆஃப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான ஸல்மாய் கலில்ஸாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் “ஒப்பந்தம் கையெழுத்தாகி 135ஆவது நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் அமெரிக்கா தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உழைப்பது தெளிவாகிறது” என தெரிவித்துள்ளார்.
தற்போது ஆஃப்கானிஸ்தானில் 8,600 நேட்டோ படையினர் உள்ள நிலையில் சில ஆயிரம் துருப்புகளை அமெரிக்கா விலக்கி கொண்டுள்ளது.
இந்த படையினர் உருஸ்கான், ஹெல்மாண்ட், பக்டிகா, லாக்மான் ஆகிய மாகாணங்களில் உள்ள 5 தளங்களில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டு உள்ளனர்.
அதே நேரத்தில் தலைநகர் காபூல் அருகே உள்ள பக்ராம் படைதளம் மற்றும் தெற்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் படைதளங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.
2021ஆம் ஆண்டு வாக்கில் நேட்டோ படைகள் முழுவதும் திரும்பி செல்ல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.